ரஷ்யாவின் GRU உளவுத்துறை நிறுவனத்தை தடை செய்த பிரித்தானியா!
ரஷ்யாவின் GRU உளவுத்துறை நிறுவனத்தை பிரித்தானியா தடை செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இடம்பெற்ற nerve agent attack தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என தீர்மானிக்கப்பட்டப்பின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாக்குதல் தொடர்பில் மொஸ்கோவின் தூதரை நேற்று அழைத்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற முன்னாள் சோவியத் முகவரான செர்ஜி ஸ்க்ரிபாலை குறிவைத்து சாலிஸ்பரி (Salisbury) நகரில் நடந்த தாக்குதல் தொடர்பாக GRU மீது முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் கூறியது.
இங்கிலாந்து தடைகள் அறிவிப்பில் GRU க்காக பணியாற்றியதாகக் கூறப்படும் எட்டு சைபர் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரச அமைப்பின் அதிகாரிகளை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த வழக்கிற்கு தலைமை தாங்கிய நீதிபதி இந்த தாக்குதல்கள் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உயர்மட்ட அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.




