இலங்கை செய்தி

டுபாயில் 250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்ற இலங்கையர்!

டுபாய் – அபுதாபியில் பிரபலமான லோட்டரி டிக்கெட்டாக அறியப்படும் பிக் டிக்கெட்டில் (Big Ticket) இலங்கையர் ஒருவர் தங்கம் வென்றுள்ளார்.

63 வயதான வங்கியாளர் முகமது நலீம் பல வருட முயற்சிக்கு பிறகு 173160 என்ற டிக்கெட் எண்ணிற்கு  250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்றுள்ளார்.

அவர் அங்கு ஏறக்குயை 20 வருடங்களாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் அதிர்ச்சியில் இருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, இறுதியாக என் பெயர் அழைக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை,” எனக் கூறினார்.

அத்துடன் எனது குடும்பம் இலங்கையில் வசிக்கிறது, நான் அந்த தங்கக் கட்டியை என் மனைவிக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன். அவள் அதை எங்கள் மகளுக்கு நகையாக மாற்றுவாள்,” என்று அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!