தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்த்த மைத்திரி, கோட்டாபய, மஹிந்த
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேற்று வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்களிக்க வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவரது வலது முழங்காலுக்கும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நேற்று வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)





