செய்தி விளையாட்டு

IPL Match 36 – 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 36வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதம் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா 8 ரன்னில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால்- ரியான் பராக் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 39 ரன்னில் அவுட்டானார்.

ஹெட்மயர் 12 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தானுக்கு கிடைத்த 6வது தோல்வி ஆகும்.

லக்னோ சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி