இலங்கை துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
டேமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்களாவர்.





