இலங்கை காணாமல் போனோர் அலுவலகத்தில் பதவி வெற்றிடங்கள் : விண்ணப்பிக்குமாறு கோரிக்கை
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு (OMP) உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) காணாமற்போன நபர்கள் தொடர்பான அலுவலகம் (ஸ்தாபனம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்) சட்டத்தின் விதிகளின்படி விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பாராளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் உள்ள தகவல் தாளின் படி OMP க்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09 டிசம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன் பதிவு தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
‘OMP க்கு உறுப்பினர்களின் நியமனம்’ என்பது உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாக குறிப்பிடப்பட வேண்டும்.