செய்தி விளையாட்டு

Women’s T20 WC – இலங்கை அணிக்கு 173 ஓட்டங்கள் இலக்கு

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரில் துபாயில் நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா களமிறங்கினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசி தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன அடுத்த பந்தே ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரை சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content