இலங்கை

இலங்கை இளைஞர், யுவதிகளை வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய கும்பல்

இலங்கை இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 47 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெருந்தொகை பணத்தை பெற்ற இந்த நபரினால் ஏமாற்றப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணையில் ஈடுபட்டபோதே இந்த அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக இந்த பல்கலைக்கழக ஊழியர் காணப்படுகிறார்.

அந்தப் பெண் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தொகையை தற்போது கைதாகியுள்ள சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் செலுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்