இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை மக்கள் சுத்தம் செய்ய நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அரசாங்கம் ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபாவை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களு கங்கை காரணமாக மில்லகந்த பிரதேசத்திற்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களு கங்கை காரணமாக புதுபவுல பிரதேசத்திற்கும், ஜின் கங்கை காரணமாக பத்தேகம பிரதேசத்திற்கும், நில்வலா கங்கை காரணமாக தல்கஹகொட பிரதேசத்திற்கும் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுகங்கை காரணமாக எல்லகாவ பிரதேசத்திற்கும் நில்வளா கங்கை காரணமாக பனடுகம பிரதேசத்திற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.