IPL Match 58 – பஞ்சாப் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து விராட் கோலியுடன் பட்டிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பட்டிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து இறுதியில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.