இலங்கை

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று (01) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லாண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் லாண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்