SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்.
ஆர்.பி.எப் தேர்வை அடுத்து எஸ்.எஸ்.சி (மத்திய பணியாளர் தேர்வாணையம்) தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam) போன்ற தேர்வுகளை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகமானது அனுமதி வழங்கியுள்ளது.
எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வரும் மே 2-ம் தாக்கத்தை ஆரம்பிக்கவுள்ளது. முன்பாக சி.ஆர்.பி.எப் தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)