இந்தியா செய்தி

ஒரே சிறையில் பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு – அதிர்ச்சியில் அதிகாரிகள்!

உத்திரகாண்டில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததும் சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்திரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பெண் கைதி உட்பட, 44 பேருக்கு 44 கைதிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ART மைய பொறுப்பாளர் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த சிறைச்சாலையில் 1,629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர். இந்த சிறையில் அடுத்தடுத்து கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில், ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரே

கைதிகளின் சிகிச்சை குறித்து டாக்டர் சிங் கூறுகையில்,“எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனது குழுவினர் சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

சிறையில் HIVயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், மருத்துவர்கள் குழு சிறையில் உள்ள கைதிகளுக்கு தொடர்ந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை உயருமா என்பது பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!