இலங்கை

மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்றைய தினம் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை செய்வதற்கு மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்