மேற்கு பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் – அன்னலெனா வலியுறுத்தல்!
மேற்கு பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது ஒரு “புவிசார் அரசியல் தேவை” என்று ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பாவை வலிமையாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போஸ்னியா-ஹெர்ஸகோவினாவின் தலைநகரான சரஜேவோவுக்குச் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்கு பால்கனில் உள்ள ஆறு நாடுகளும் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் அன்னலெனா தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)