ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் – ரிஷி சுனக்!
2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான நாட்டின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு அவர்கள் முடக்கிய ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரிஷி சுனக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த கட்டுரையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் பிற உதவிகள் தொடர்ந்து தேவைப்படுவதாகக் கூறினார்.
“ரஷ்யாவின் பொருளாதாரத்தை தாக்குவதில் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் உறைந்த ரஷ்ய சொத்துக்களை கைப்பற்றுவதில் நாம் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.