இந்தியா

கேரளாவில் முதல்வரின் கார் உட்பட 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து

சாலையில் ‘ஸ்கூட்டி’ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கின.இந்த விபத்தில் முதல்வர் சென்ற கார், ஐந்து பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியன சேதமடைந்தன.

திருவனந்தபுரத்தின் எம்சி சாலையில் இருந்து அட்டிங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென்று நடுரோட்டில் பிரேக் பிடித்து வலதுபுறம் திரும்ப முயன்றார்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனம், அந்தப் பெண் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

அதனால், அந்த வாகனத்தைத் தொடர்ந்து வந்த மற்ற பாதுகாப்பு வாகனங்கள், முதல்வரின் கார் மற்றும் ஆம்புலன்ஸ் என வரிசையாக அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

ஆயினும், இந்த விபத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே