இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 5 மாதங்களில் 7 லட்சம் பேர் பணிநீக்கம்

அமெரிக்காவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், 7 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 80 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பின் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதனால் ஆண்டுதோறும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

‘அமெரிக்காவில் நிலவும் தற்போதைய சூழலால் நுகர்வோர் செலவிடுவது குறைந்துள்ளது, நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது, வரிகளில் மாற்றங்கள் ஆகியவை உள்ளன என இசேலஞ்சர், கிரே மற்றும் கிறிஸ்துமஸ் ன்ற அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை கண்காணிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

‘இந்த நிலைமைகளால் நிறுவனங்களின் வருவாய் குறைகிறது, ஆட்சேர்ப்பை தாமதப்படுத்துகின்றனர், பணிநீக்கங்களை அறிவிக்கின்றனர்,” என்றார்.

இந்தாண்டு பணிநீக்கங்களில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையில் இதுவரை 74,716 பேர் வேலை இழந்துள்ளனர்.

இது, 2024ல் 55,207 ஆக இருந்தது. ‘அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட்’ போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைத்து உள்ளன.

இவை ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. எனவே, சேவை துறையில், 44,273 பேர்; சில்லறை வர்த்தக துறையில், 75,802 பேர்; அரசு துறையில் மிகப்பெரிய அளவாக, 2,84,000 பேர்; ஊடக துறையில், 1,820 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அரசு துறையில் பெரிய அளவில் ஆட்க்குறைப்புக்கு காரணமாக தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னாள் தலைவராக இருந்த சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் செலவு குறைப்பே காரணம் என கூறப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content