வியட்நாம் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலி
தெற்கு வியட்நாமில் உள்ள மரத்தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோங் நாய் மாகாணத்தில் உள்ள பின் மின் வூட் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கொதிகலன் பழுதடைந்ததால் ஏற்பட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொதிகலனின் பராமரிப்பு பணியை தொழிலாளர்கள் முடித்த சில நிமிடங்களில் Vinh Cuu மாவட்டத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.





