உருகும் பனியால் வெளிவரும் 5000 ஆண்டு பழைமையான பாக்டீரியா : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
ருமேனியாவில் உள்ள ஒரு பழங்கால பனிக்கட்டி குகையில் இருந்து 5,000 ஆண்டுகள் பழமையான பாக்டீரியா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பழங்கால பாக்டீரியா திரிபு 10 வெவ்வேறு நவீன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது. குறிப்பாக கடுமையான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்பை காட்டியுள்ளது.
இந்நிலையில் உருகும் பனியால் இந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டால், அவற்றின் எதிர்ப்பு மரபணுக்கள் வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் உலகளாவிய சவாலை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஃபிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜியில் (Frontiers in Microbiology) வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், 25 மீட்டர் பனி மையத்தை துளையிட்டு, பாக்டீரியாவின் மரபணுவை வரிசைப்படுத்தி அதன் தன்மையை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.





