நைஜீரியாவில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!
நைஜீரியா நாட்டில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி கடந்த 2 வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த குழுவினரின் குடும்பத்தினர் குழந்தைகள் உள்பட 510 பேர் அரசிடம் சரண் அடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)