ரஷ்யாவில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் மரணம்
செச்சென் தலைநகர் க்ரோஸ்னியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்ய பிராந்திய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலையத்தில் எரிபொருள் தாங்கியொன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செச்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், டெலிகிராமில் ஒரு அறிக்கையில், நிலைமையை தனது தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொண்டதாகக் கூறினார். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறிய அவர், மேலதிக விவரங்களை தெரிவிக்கவில்லை.
செப்டம்பர் 2024 மற்றும் ஆகஸ்ட் 2023 இல் அண்டை பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிலையங்களில் வெடித்ததில் முறையே 13 பேர் மற்றும் 35 பேர் கொல்லப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.