இலங்கை செய்தி

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு நடந்தது என்ன?

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தூதரகங்கள் ஊடாக, போர் பதற்றம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.​ பஹ்ரைனில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அங்குஅ தங்கியிருந்த இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அவசரத் தேவைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஈரான் பதிலடி தாக்குதல் – பாடசாலைகளை‌ மூடியது இஸ்ரேல்

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருந்திரளான பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூகச் சேர்க்கைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழ்நிலை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை […]

ஐரோப்பா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இத்தாலியின் இராணுவ தளம் பாதிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் போர் சூழலில் 300 பேரைக் கொண்ட தனது இராணுவத் தளம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தாலிய பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பதட்டத்தைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) , “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கைகளை தனது நாடு நிராகரிப்பதாகக் கூறினார். “(இது) […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி செயலாளர்

  • February 28, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது. எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படும் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என வலியுறுத்தினார். […]

உலகம்

ஈரானின் பதிலடி தாக்குதல் – 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கமைய இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினாப் கவுண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 48 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய செய்தி  ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!

உலகம் செய்தி

ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானில் ‘சுதந்திரம்’ தான் தனது முக்கிய குறிக்கோள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து வொஷிங்டன் போஸ்ட்டிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் “பாதுகாப்பான” இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறிய அவர், எனக்கு ஒரு பாதுகாப்பான தேசம் வேண்டும், அதுதான் நமக்கு இருக்கப் போகிறது.” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று காலை முதல் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி (BREAKING NEWS) […]

இந்தியா செய்தி

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு

  • February 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துள்ளன மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிரதமர் ஸ்டார்மர்

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், பிரதமர் ஸ்டார்மர் (Starmer) அவசர கோப்ரா(COBRA) குழுக் கூட்டத்தை நடத்தினார். சனிக்கிழமை காலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டன. தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி இது முன்கூட்டிய தாக்குதல் நடவடிக்கை என இரு நாடுகளும் விளக்கம் அளித்தன. இதற்கு பதிலாக, ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் பல பகுதிகள் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதை அமெரிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மிகப்பெரிய போர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதென இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப், ஈரானிய அரசாங்கத்தை கையகப்படுத்த முயற்சி செய்துள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்காக ஈரானிய மக்களுக்கு இப்பொழுது செயற்படுங்கள் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானில், ஐந்து நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவுததம் […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

error: Content is protected !!