அரசியல் இலங்கை செய்தி

பேரிடருக்கு மத்தியிலும் புலிப்புராணம் பாடும் விமல்!

  • December 16, 2025
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளின் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுவரும் சர்வதேச உதவிகள் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு, “அநுரகுமார திஸாநாயக்கவால்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் […]

செய்தி

மீள் கட்டமைப்பு நிதிக்கு ஹட்டன் நேஷனல் வங்கி பெருந்தொகை நிதி உதவி

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கை மீள் கட்டமைப்பு நிதியகம் (Rebuilding Sri Lanka’) நிதியத்திற்கு  ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National) வங்கி 100 மில்லியன் ரூபா நன்கொடை டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘இலங்கை மீள் கட்டமைப்பு  (Rebuilding Sri Lanka’) ’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ந்து நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்தாரி இந்தியாவை சேர்ந்தவரா?

  • December 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி சஜித் அக்ரம் (Sajid Akram) இந்தியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் அவரின் குடும்பத்தினர் வசித்து வருவதாக  கூறப்படுகிறது. ஆனால் ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருடன் சஜித் அக்ரமிற்கு குறைந்த தொடர்பே இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏறக்குறைய 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மற்றைய நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டெழ தயாராகிறது இலங்கை! சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டுக்கு நாள் நிர்ணயம்!

  • December 16, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு உறுதிப்படுத்தினார். டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கிலேயே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு நடத்தப்படுகின்றது. “ பேரிடரால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் உலக வங்கியின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னரே, துல்லியமான தரவுகளை நோக்கி நகர […]

ஐரோப்பா செய்தி

நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) பெலாரஸிற்கு வருமாறு அழைப்பு!

  • December 16, 2025
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) தனது நாட்டிற்கு  வருமாறு பெலாரஸ் (Belarus) ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரான லுகாஷென்கோ (Alexander Lukashenko), பெலாரஸுக்கும் வெனிசுலாவுக்கும் நீண்டகால உறவுகள் இருப்பதாகவும், மதுரோ விரும்பினால் மின்ஸ்க்கு (Minsk) வரலாம் என்றும் கூறினார். அதற்கான எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை என்றும், ஆனால் ட்ரம்புடன் பேசுவதற்கு திறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், மதுரோவிற்கும் இடையே மோதல் […]

இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவு சான்றிதழ்கள் அழிவு

  • December 16, 2025
  • 0 Comments

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்த […]

இலங்கை

தமிழகம் செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்த இவ்வாரம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு “ஏக்கிய இராச்சிய“ அரசியல் அரசியலமைப்பை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான […]

ஐரோப்பா செய்தி

தொழிநுட்ப கோளாறு – பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிப்பு

  • December 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன. சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட A வீதிகள் மற்றும் மோட்டார் பாதைகளில் உள்ள, நிலைக்கு ஏற்ப வேகம் மாறும் முறைமையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வேக வரம்பு மாற்றப்பட்டதும் சில ஓட்டுநர்கள் தவறாக வேகமாக ஓட்டியதாகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீரமைப்பு பணிகள் தற்பாது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய […]

இலங்கை

டிட்வா பேரழிவு -வீதிகள் மற்றும் பாலங்களை மீட்டெடுக்க 190 பில்லியன் ரூபா தேவை

  • December 16, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் கூடியது. இதன்போது நாட்டில் ஏற்பட்ட பேரழிவின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களை மதிப்பிடுவதற்கு […]

இலங்கை செய்தி

வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக வெருகலில் ஆர்ப்பாட்டம்!!

  • December 16, 2025
  • 0 Comments

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக மக்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல்,மாவடிச்சேனை, சேனையூர்,வட்டவான் போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக இருந்த நிலையில் பிரதேச செயலாளர் வீடு வீடாக வந்து எங்களை ஏற்றிக் கொண்டு சென்று முகாமில் தங்க வைத்தனர். முகாமில் இருந்த பத்து நாட்களும் அவர் எங்களுடன் நாங்கள் சாப்பிட்ட உணவையே சாப்பிட்டு எங்களுடைய முகாமை பார்வையிட்டு வந்தார். இவ்வாறான ஒரு தொண்டு சேவையில் ஈடுபட்ட பிரதேச செயலாளர் மீண்டும் எங்களை வீட்டில் […]

error: Content is protected !!