ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டுப்பிடிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்  ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள கால்தடங்களில்  சில 40 செ.மீ (15 அங்குலம்) விட்டம் கொண்டவை எனக் கூறப்படுகிறது. மேலும் பலவற்றில் கால் விரல்கள் மற்றும் நகங்களின் தெளிவான தடயங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் மிலனின் வடகிழக்கில் உள்ள ஸ்டெல்வியோ (Stelvio national park) தேசிய பூங்காவின் சில கிலோமீற்றர் தொலைவில் புகைப்படக் கலைஞர் ஒருவர்  […]

இலங்கை

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நிறைவடையும் வரையில் இவரது பதவிக்காலம் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை

புலிகளுடனான சமாதானப் பேச்சுகள் – தூசுத்தட்ட மீண்டும் தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார். ‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவரங்களை இந்தப் புத்தம் வெளிப்படுத்தும் என புத்தகத்தை வெளியிட உள்ள விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் […]

உலகம்

ஈரானில் கைது செய்யப்பட்ட நர்கஸ் முகமதி உடல் ரீதியான காயங்களுக்கு உள்ளானதாக தகவல்!

  • December 17, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) கடந்த வாரம் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு முறை மருத்துமவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வடகிழக்கு நகரமான மஷாத்தில் (Mashhad) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடல் ரீதியான பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முகமதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முகமதி கைது செய்யப்பட்ட பின்னர் அவருடன் தொலைபேசியில் சுருக்கமாகப் பேசியதாகவும், அவசர சிகிச்சை […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் 10 வயது மாணவரை குத்திக் கொன்ற இளைஞர் : விசாரணையில் வெளியான தகவல்!

  • December 17, 2025
  • 0 Comments

ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் 10 வயது மாணவர் ஒருவர் பிற மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று கோர்கி-2  (Gorki-2) கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 15 வயதுடைய சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை காயப்படுத்தியதாகவும், 10 வயது சிறுவனை குத்தி கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை  கைது செய்ய ஆயுதமேந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏராளமான மாணவர்கள் பாதுகாப்பான  இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் உடமையில் வெடிப்பு சாதனம் […]

உலகம் செய்தி

சீனாவில் முக்கிய மூலப்பொருளை உரிமம் இன்றி ஏற்றுமதி செய்த 27 பேர் கைது!!

  • December 17, 2025
  • 0 Comments

ஏற்றுமதி உரிமம் இன்றி ஆன்டிமனி இங்காட்களை ( antimony ingots) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த 27 சீன பிரஜைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனா உலகின் மிகப்பெரிய ஆன்டிமனி உற்பத்தியாளராக உள்ளது. இது பேட்டரிகள், சில்லுகள், சுடர் தடுப்பு மருந்துகள் மற்றும் வெடிமருந்துகள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் மற்றும் பலவற்றை தயாரிப்பதற்கு  மூலோபாய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆன்டிமனி இங்காட்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது. இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

செய்தி

அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் […]

இலங்கை

இலங்கையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாகும். அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர். இதனிடையே, அனர்த்தம் […]

இந்தியா

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் – விமான, போக்குவரத்து சேவைகள் முடக்கம்

  • December 17, 2025
  • 0 Comments

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு கடுமையான வரம்பிற்குக் கீழே இருந்தது. சில பகுதிகள் மோசமான மண்டலத்தில் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் பலத்த காற்று மற்றும் மெல்லிய மூடுபனி மாசுபாட்டின் அளவை கடுமையான வகையிலிருந்து வெளியே தள்ள உதவியது. […]

error: Content is protected !!