உலகம் செய்தி

எத்தியோப்பியாவில் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது

  • December 17, 2025
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஜோர்டான்(Jordan), எத்தியோப்பியா(Ethiopia), ஓமன்(Oman) ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது நரேந்திர மோடிக்கு, ​​மிக உயர்ந்த குடிமகன் விருதான தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா(Great Honour Nishan of Ethiopia) வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, “மிகவும் பழமையான மற்றும் வளமான நாகரிகத்தால்” கௌரவிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் இந்த விருதை […]

பொழுதுபோக்கு

ஜீ5 கையில் ‘பராசக்தி’! சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?

  • December 17, 2025
  • 0 Comments

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா முதல் முறையாக இணையும் திரைப்படம் ‘பராசக்தி’. அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஓடிடி (OTT) உரிமம் குறித்த ஒரு பிரம்மாண்டமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டுகள் வெளியாவதற்கு முன்பே, இதன் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ஜீ5 (Zee5) […]

உலகம்

இரண்டாம் முறை ‘மில்லியன் ஜாக்பாட்’ வென்ற பிரிட்டன் தம்பதி

  • December 17, 2025
  • 0 Comments

ஒரு பிரிட்டன் தம்பதி, அரிதினும் அரிதாக இரண்டாம் முறையாக ‘லோட்டோ’ என அழைக்கப்படும் ‘ஜாக்பாட் லாட்டரி’ போட்டியில் $1.7 மில்லியன் வென்றுள்ளனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி நடந்த அந்த லாட்டரி போட்டியில் அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டு, உலகெங்கும் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். திரு ரிச்சர்ட் டேவிஸ், அவரது மனைவி ஃபெயி ஸ்டீவன்சன் தம்பதி, கடைசியாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த போட்டியில் இதேபோன்று S$1.7 (£1 million) வென்றுள்ளனர். “எங்களுக்கு மீண்டும் பரிசு […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மருத்துவ அறிக்கை வெளியீடு

  • December 17, 2025
  • 0 Comments

நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மார்பு தொற்று நோயால் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) சிகிச்சை பெற்று வரும் வங்கதேச(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியா(Khaleda Zia) சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்று அவரது மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர், பல உடல்நலக் கோளாறுகளுக்காக நவம்பர் 23 முதல் டாக்காவில்(Dhaka) உள்ள […]

உலகம் செய்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா

  • December 17, 2025
  • 0 Comments

மோசமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வங்காளதேச(Bangladesh) அரசியல் தலைவர்களின் இந்தியாவிற்கு(India) எதிரான அறிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க்கில்(Jamuna Future Park) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இன்று […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த புலம்பெயர்ந்தோர் கைது!

  • December 17, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. சுற்றுலா விசாக்களில் வருகை தந்த குறித்த ஏழு பேரும் நிறுவனம் ஒன்றில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்ததாக உள்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சோதனை […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூடு : தவறான பிரச்சாரத்திற்கு பலியான பாகிஸ்தான்!

  • December 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தனது நாடு தவறான பிரச்சாரத்திற்கு பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்ற தவறான கூற்றுகளை ஆன்லைனில் பலர் பரப்பிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில்  இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய  செய்தி தொடர்பாளர்  அத்தாவுல்லா தரார் (Attaullah Tarar) மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஹனுக்காவைக் கொண்டாடும் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

பொழுதுபோக்கு

D55 லேட்டஸ்ட்: மாரி செல்வராஜ் செதுக்கும் வரலாற்றுப் படைப்பு – ஆச்சரியத்தில் தனுஷ் ரசிகர்கள்!

  • December 17, 2025
  • 0 Comments

‘கர்ணன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணையவுள்ள #D55 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தைப் பற்றிய இரண்டு மிக முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. முதல் முக்கியமான செய்தி என்னவென்றால், இப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பீரியட் டிராமா (Period Drama) ஆக உருவாகவுள்ளது. மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் சமூக அரசியல் பேசினாலும், அவை சமகாலத்தைச் சார்ந்தவையாக இருந்தன. ஆனால், #D55 […]

செய்தி விளையாட்டு

பனிமூட்டம் காரணமாக 4வது டி20 போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

  • December 17, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநில தலைநகர் லக்னோவில்(Lucknow) நான்காவது போட்டி ஆரம்பமாக இருந்தது. இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்தில் […]

error: Content is protected !!