தமிழக முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (19) சென்னையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு விரைவாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை […]













