ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் 142 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத தேவாலயம்!

  • October 31, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família)  உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது. சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள மைய கட்டிடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தேவாலயத்தின் தற்போதைய உயரம் 162.91 மீட்டராகும். இதன் மூலம், 135 ஆண்டுகளாக (1890 முதல்) உலகின் மிக உயரமான தேவாலயமாக இருந்த ஜெர்மனியில் உள்ள உல்ம் மினிஸ்டரின் (Ulm Minster)  சாதனை அதிகாரப்பூர்வமாக முறியடிக்கப்பட்டுள்ளது. சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família)  தேவாலயம் உலகின் மிகப்பெரிய […]

இந்தியா

தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • October 31, 2025
  • 0 Comments

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. நேற்றிரவு மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் (Email) மூலமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடனேயே, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்திற்குள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளுடன் TVK அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, […]

உலகம் செய்தி

காடுகளில் இயற்கையாகவே உருவாகும் கொரோனா வைரஸ் – மனிதர்களுக்கு ஆபத்தா?

  • October 31, 2025
  • 0 Comments

தென் அமெரிக்காவில் வௌவால்களில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுநோய்க்கு காரணமான வௌவால்களை மிகவும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பானிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வடக்கு பிரேசிலில் வௌவால்களின் எண்ணிக்கையை ஆராய்ச்சி செய்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பீட்டாகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த BRZ batCoV என்ற வைரஸைக் கண்டறிந்துள்ளனர். மனிதர்களுக்கு பரவியமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும்  வௌவால்களிடமிருந்து மக்களுக்கு வைரஸ் பரவும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் […]

இலங்கை

இலங்கையில் அனைத்து எம்.பிகளுக்கும் பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் பாதுகாப்பு கோரும் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜகத் விதானகே தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்று (31) நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.ஜி.பி பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டார். இதன்போது  எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றதாக தெரியவருகிறது. விவாதங்களை தொடர்ந்து ​​பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பொழுதுபோக்கு

ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா… ரங்கராஜின் பதில் என்ன?

  • October 31, 2025
  • 0 Comments

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொவதாக கூறி, ஏமாற்றியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார்.மேலும் ரங்கராஜால் பல […]

உலகம் செய்தி

பறக்கும் விமானத்தில் இந்திய பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து – உயிரைக் காப்பாற்றிய தாதியர்கள்

  • October 31, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில், அதில் பயணித்த தாதியர்கள் இருவர் அவரைக் காப்பாற்றியுள்ளனர். கடந்த 13ஆம் திகதி கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் அரேபியா (Air Arabia) விமானத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது. விமானத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பயணியை, கேரளாவைச் சேர்ந்த இளம் தாதியர்கள் இருவர் காப்பாற்றியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) தகவல் வெளியிட்டுள்ளது. திருச்சூரைச் சேர்ந்த 34 வயதான பயணி […]

பொழுதுபோக்கு

வந்தது வெள்ளி…“சரிகமப” போருக்கு தயாரான போட்டியாளர்கள்…

  • October 31, 2025
  • 0 Comments

உலகில் இசையை பிடிக்காமல் யாரும் இருக்கமாட்டார்கள். மீளாத்துயரில் இருக்கும் ஒருவரையும் மீட்டெடுக்கும் சக்தி இசைக்கு உண்டு. அலைப்பாயும் ஒருவரது சிந்தனையை கட்டுக்குள் வைத்திருக்கும் திறனும் இந்த இசைக்கு உண்டு. இன்றைய காலக்கட்டத்தில் இசையில் நாட்டமுள்ளவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்காக பல்வேறு மேடைகள் இருக்கின்றன. அந்த வகையில் உலகத்தமிழர்களுக்காக பல தமிழ் சேனல்கள் மேடைகளை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி பெயர் போனது. ஜீ தமிழ் என்றாலே சரிகமப என்ற அளவுக்கு ரீச் ஆகி […]

ஐரோப்பா செய்தி

ஒருவருடத்தில் 43000 அகதிகள் : திசை திருப்பப்படும் பிரித்தானிய மக்கள்!

  • October 31, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள்  பிரவேசித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கருத்துகணிப்பின்படி, உள்ளுரில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் முதல் மூன்று இடங்களில்  சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான […]

உலகம்

சிங்கப்பூரில் ஸ்திரமான நிலையில் பொருளாதாரம் – வேலையின்மை வீதம் குறைவு

  • October 31, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலையின்மை வீதம் குறைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வேலை செய்வோர் வீதம் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி அடைந்து செல்வதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இரண்டாம் காலாண்டில் 10,400 ஆக இருந்த வேலைவாய்ப்பு, மூன்றாம் காலாண்டில் 24,800 பேராக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர்கள், வெளிநாட்டவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வேலையின்மை விகிதமும், ஆட்குறைப்பு விகிதமும் குறைவாகவும் […]

இலங்கை

இவ்வாண்டில் இரண்டு டிரில்லியன் ரூபாயை வசூலித்த இலங்கை சுங்கத்துறை!

  • October 31, 2025
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கத்துறை வரி வருவாயாக இரண்டு டிரில்லியன் ரூபாயை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட நேற்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அரசாங்கத்தின் வரி வருவாய் வசூல் துறை ஒரே ஆண்டில் சேகரித்த அதிகபட்ச வருவாயாக சுங்கத்துறை இந்த சாதனை வருவாயை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேகரிக்கப்படும் வருவாயில்,   630 பில்லியன் மோட்டார் வாகனங்களால் ஆனது. அதன்படி, ஆண்டு இறுதிக்குள் வருவாய் இலக்கை விட சுமார்  300 பில்லியன் […]

error: Content is protected !!