ஐரோப்பா

குரேஷியாவில் 1990 இல் இராணுவத்தால் அழிக்கப்பட்ட அழகிய ஹோட்டலை புனரமைக்க நடவடிக்கை!

  • August 31, 2024
  • 0 Comments

குரோஷியாவில் 1990களில் குண்டுவீசித் தாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கால விடுமுறை விடுதி £114.8 மில்லியன் திட்டத்தில் மீண்டும் உருவாக்கப்பட உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் இந்த விடுதி தற்போது மீள் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 1990 களில் குரோஷிய இராணுவம் நிலத்தை கையகப்படுத்தியபோது, ​​சிப்பாய்கள் கட்டிடங்களை சூறையாடி ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது மற்றும் ஆயுதப்படைகள் அதை இராணுவத்திற்கான விடுமுறை இடமாக பயன்படுத்தியுள்ளனர். […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

விளையாட்டு

அடுத்த உசைன்போல்ட் எனக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரரின் தனிப்பட்ட சாதனை!

  • August 31, 2024
  • 0 Comments

அடுத்த உசைன் போல்ட் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கௌட், U20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பிரிஸ்பேனில் பிறந்த 16 வயதான அவர், தற்போது பெருவின் லிமா நகரில் இடம்பெற்று வரும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட சாதனையை படைத்தள்ளார். இதன்படி இறுதி போட்டியில் 20.60 வினாடிகளில் தனது இலக்கை அடைந்து அவர் சாதனை படைத்துள்ளார். பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் ஜேக் ஒடே-ஜோர்டன் 20.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் […]

உலகம்

அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லும் ஸ்பெயின் பிரதமர்!

ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் அடுத்த மாதம் சீனாவிற்கு விஜயம் செய்வார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 7-12 தேதிகளில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகருக்குச் செல்லும் சான்செஸ், தனது பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என்று ஸ்பெயின் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு தற்காலிக வரிகளை அறிவித்ததையடுத்து, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக மோதலில் சிக்கியுள்ளன.

ஐரோப்பா

ஜெர்மனியில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து சம்மவம் ; ஐவர் காயம்!

  • August 31, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதலில் ஐவர் காயமுற்றனர். சீகன் நகரில் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அச்சம்பவம் பயங்கரவாதச் செயல் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று உள்ளூர் காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியது. சந்தேக நபரான 32 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். ஜெர்மனியின் சொலிங்கன் நகரில் சென்ற வாரம் மூவரைப் பலிவாங்கிய கத்திக்குத்துச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு […]

இலங்கை

இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதுதான் இலக்கு – நாமல்!

  • August 31, 2024
  • 0 Comments

இலங்கையை ஆசியாவின் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெமட்டகொடையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “உங்களுக்காக ஒரு வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள். ஆசியாவிலேயே மிகவும் வளர்ந்த நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம்.” எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா

22 பயணிகளுடன் மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர் : தேடுதல் வேட்டை தொடர்கிறது!

  • August 31, 2024
  • 0 Comments

கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மூன்று பணியாளர்கள் மற்றும் 22 பயணிகளுடன் இருந்த ரஷ்ய ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முதற்கட்டத் தரவை மேற்கோள்காட்டி Interfax செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. Mi-8T ஹெலிகாப்டர் Vachkazhets எரிமலைக்கு அருகே புறப்பட்ட நிலையில், 04:00 GMT நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசியா

மனித உரிமை மீறல் சம்வலங்கள்: பங்ளாதே‌ஷ் செல்லும் ஐநா விசாரணைக் குழு

  • August 31, 2024
  • 0 Comments

பங்ளாதே‌ஷின் இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப விசாரணைக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பப்போவதாக ஐக்கிய நாட்டுச் (ஐநா) சபையின் மனித உரிமை அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) அறிவித்தது. பங்ளாதே‌ஷில் அண்மையில் பலரைப் பலிவாங்கிய கலவரத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து தகவல்களைக் கண்டறிய ஐநா குழு ஒன்று அந்நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது. பங்ளாதே‌ஷ் கலவரத்தில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 5ம் திகதியன்று ‌ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் […]

ஐரோப்பா

UKவில் சிக்னலில் காத்திருக்கும்போது தொலைபேசிகளை பார்க்க தடை : மீறினால் அபராதம்!

  • August 31, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் சாலை விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ட்ராஃபிக்கில் சிக்கிக் கொள்ளும் போதோ அல்லது சந்திப்பில் காத்திருக்கும் போதோ தொலைபேசிகளை பார்ப்பவர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றத்தை இழைக்கும் நபருக்கு 2500 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன், அவர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பாக நிறுத்தப்படாமல்” மொபைல் போன் அல்லது சாட் நாவ் பயன்படுத்தினால், £1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனம் ஓட்டுவதற்கு முற்றிலும் […]

பொழுதுபோக்கு

சோபிதா துலிபாலாவின் முன்னாள் காதலர் இவரா?

  • August 31, 2024
  • 0 Comments

நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. நாக சைதன்யாவிற்கு ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனால், நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்துள்ள நடிகை சோபிதாவும் இதற்கு முன் பிரணவ் மிஸ்ரா என்பவரை காதலித்து டேட்டிங் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. பிரணவ் மிஸ்ரா பேஷன் டிசைனர் ஆவாராம். இருவரும் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் […]

error: Content is protected !!