யாழ்ப்பாணத்தில் சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நிலை
உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் […]













