16 மணி நேரம் இடைவிடாத உண்ணாவிரதம் உடல் எடை குறைக்க உதவும் – ஆய்வில் தகவல்

Intermittent Fasting எனப்படும் 16 மணி நேரம் இடைவிடாத உண்ணாவிரதம், உடல் எடையைக் குறைப்பதில் பலன்களை தருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதும் அதிக நன்மைகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த உடல் எடை குறைப்பை உறுதிப்படுத்த நீண்ட கால ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை உடல் பருமன் கணிசமாக அதிகரிக்கிறது.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் சுமார் 250 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், கிட்டத்தட்ட 90 கோடி பேர் பருமனானவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)