இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுமி

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பெடுல்(Betul) மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாடசாலை வேன் வராததால் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

5ம் வகுப்பு படிக்கும் சுரபி யாதவ்(Surabi Yadav), தனது பாடசாலை பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு சாலையின் நடுவில் அமர்ந்து மூன்று மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துக் கட்டணத்தை சுரபியின் குடும்பத்தினர் செலுத்தத் தவறியதாலும் இதனால் சுரபிக்கான வேன் சேவையை நிறுத்தியதாகவும் பாடசாலை நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

தகவல் கிடைத்ததும் சிச்சோலி(Chicholi) காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் வந்து பாடசாலை நிர்வாகத்திடம் இது குறித்து பேசுவதாக குறித்த சிறுமிக்கு உறுதியளித்துள்ளனர்.

பின்னர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சிறுமி எழுந்து சாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், சிறுமி தனது பாடசாலையை அடைய தினமும் கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் பயணம் செய்வதாகவும் சுரபி கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவள் எனவும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!