மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் கடற்பரப்பிற்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ன 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர், இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வடமத்திய கடற்படை கட்டளையின் படகுகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.
இருப்பினும், தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த 10 மீனவர்களையும் கடற்படையினர் சோதனையிட்டு கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





