08 தங்கப்பதக்கங்கள் – யாழில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த பெண்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் குறித்த பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.
அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் வருமாறு,
01. மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம்.
02. சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology), மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி.
03. மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது.





