உலகம் செய்தி

பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 23 பேர் பலி

 

பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இது தற்கொலை குண்டுத் தாக்குதல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இ
ராணுவ முகாம்தான் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பலர் சிவில் உடை அணிந்திருந்தவர்கள் எனவும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே உயிரிழந்தவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களா என்பதை உறுதிப்படுத்துவது அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக இராணுவ முகாமாக பாடசாலை கட்டிடம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தாக்குதலாளிகள் கட்டிடத்தின் மீது மோதவிட்டு அது வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் 27 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆதரிக்கும் இஸ்லாமிய ஆயுத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி