கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது கோடாவின் எரிபொருள் அமைச்சர்

கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து வீசப்படுவதற்கு எதிர்ப்பொருள் கட்டுப்பாடும் கியூ வரிசையும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்த நெருக்கடியை ஏற்படுத்தி கோடாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு விரட்டியது அவருடைய அரசாங்கத்தின் எரிபொருள் அமைச்சராக இருந்தவர் என அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்ச்சியை இந்த சதியை அவர் அப்போதைய அமெரிக்க தூதுவருடன் சேர்ந்து செய்தார் நாட்டில் கையருப்பில் ஏழு தினங்களுக்கு மாத்திரமே எரி பொருள் இருப்பதாக அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் மக்கள் அச்சமடைந்து எரிபொருட்களை பாரிய அளவில் சேகரிக்கத் தொடங்கினர்.
இதனால் கையறுப்பில் இருந்த ஆனால் நாட்டுக்கு போதுமான எரிபொருள் தீர்ந்து விட்டது
அந்த அமைச்சர் என்னுடனும் பாராளுமன்றத்தில் பலமுறை வாதிட்டுள்ளார். அவர் இன்று தோல்வியடைந்து வீட்டில் இருக்கிறார்
ஆனால் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த காலப்பகுதியில் உதய கம்மன்பில காமினி லொகுகே கஞ்சன விஜேசேகர ஆகிய மூவரும் எரிபொருள் துறை அமைச்சர்களாக இருந்தனர்.
எனினும் இவர்கள் மூவரில் சதி செய்த அமைச்சர் எவர் எனக்கூற சாமரசம்பத் மறுத்துரைத்துள்ளார்.