இலங்கையில் காதலால் நேர்ந்த விபரீதம் – இளைஞன் மரணம்
மொனராகலை காவல் பிரிவில், மதுருகெட்டிய சந்திக்கு அருகில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மொனராகலை மதுருகெட்டிய சந்திக்கு அருகில் வசித்து வந்த ஹஷான் இந்திக பண்டாரா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது வீட்டின் முன்புற தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்கு முன், தனது தாய் மற்றும் தந்தைக்கு தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் ஒன்று மேசையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது பணப்பையில் அவரது காதலியின் புகைப்படமும் காணப்பட்டது. மேலும், பல நாட்களாக அவர் தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த நிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாயார் விகாரைக்கு சென்றிருந்தபோது, இளைஞர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இறந்தவரின் தாத்தா அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது, அவர் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணையை மொனராகலை மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பசிந்து பராக்கிரம பண்டாரா பத்மகுலசூரிய அவர்கள் நடத்தினார்.





