அனுரவின் வெற்றி குறித்த பொய் அம்பலமாகியுள்ளது
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு எந்தவொரு கருத்துக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகபூர்வ x கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி 53% வீதத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 24% வீதத்துடன் வெற்றி பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை பிரதிநிதிகள் அத்தகைய கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று கூறுகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)