ஐரோப்பா

ரஷ்ய- வடகொரியா ஒப்பந்தம் – வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் வடகொரியா பயணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, வருகிற அக்டோபரில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் சந்திப்புக்கு பின்னான தொடர் நடவடிக்கையாக இது இருக்கும் என கூறியுள்ளார். இதனால், லாவ்ரவ் பயணத்தின்போது, வடகொரியாவுக்கான புதினின் பயணம் பற்றி ஆலோசிக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கேற்ப, வடகொரியாவுக்கு வருகை தரும்படி, இந்த மாத தொடக்கத்தில் புதினிடம், கிம் ஜாங்-அன் கூறினார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

See also  ஜெர்மனியில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு நிதி உதவி

Russian Foreign Minister to Visit North Korea Following Putin-Kim Summit

இதில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின்போது, ரஷ்யாவை ஒட்டியுள்ள வடகொரியாவின் எல்லைகள் மூடப்பட்டன. பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், முதன்முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ரஷ்யாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் பயணம் மேற்கொண்டார்.

அனைத்து கெட்ட சக்திகளையும் தண்டித்து, போரில் ரஷ்யா வெற்றி பெறும் என்று புதினிடம், கிம் ஜாங் அன் கூறினார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, ஆயுத ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்தது. வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என தெரிவித்தது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content