செய்தி தமிழ்நாடு

பொன்னியின் செல்வன் திரையிடப்போவது இல்லை

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, முதல் நாள் சிறப்பு காட்சிகளின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்போவது இல்லை என ஒருமனதாக முடிவு செய்யப்படுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை காலை 9 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!