கூந்தல் ஆரோக்கியம்: நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
தலைமுடி உதிர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், உடலின் உள் ஆரோக்கியமே முடியின் தரத்தைத் தீர்மானிக்கிறது என வலியுறுத்துகின்றனர்.
ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை மற்றும் ரசாயனப் பயன்பாடு ஆகியவை முடியின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. வேர்க்கால்கள் ஊட்டச்சத்தை ரத்தத்தின் வழியாகப் பெறுவதால், புரதம் மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகள் அவசியமாகின்றன.

வெறும் விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய்களை மாற்றுவதை விட, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சரிவிகித உணவு மற்றும் மனஅழுத்தமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்ட கால பலனைத் தரும்.
வெளிப்பூச்சாக இயற்கை எண்ணெய்கள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது
நம்மில் பலர் விலை உயர்ந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை மாற்றிக்கொண்டே இருப்போம். ஆனால் பலன்? ஏமாற்றம் மட்டுமே.
ஏன் தெரியுமா? நிபுணர்கள் ஒரு முக்கிய ரகசியத்தை உடைக்கிறார்கள்: “முடி வளர்ச்சி என்பது 80% நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதிலும், 20% மட்டுமே நீங்கள் தலைக்கு என்ன தேய்க்கிறீர்கள் என்பதிலும் இருக்கிறது.”

உடல் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதற்கு முட்டை, கீரை, நட்ஸ் மற்றும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை வேர்களுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் புரதத்தை ரத்த ஓட்டம் வழியாகக் கொண்டு செல்லும்.
அடுத்து வெளி பராமரிப்பு அதற்கு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்யுங்கள். வாரத்திற்கு 2-3 முறை மட்டும் தலைக்குக் குளியுங்கள்.
மேலும் தற்போது மக்களிடையே அதிக மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்வது அதிகரித்துள்ளது அதை நிறுத்தினாலே பாதி முடி உதிர்வு நின்றுவிடும்.






