ஈரானில் ஏவுகணை உற்பத்தி மையங்கள் அழியவில்லை
தங்களின் உண்மையான ராணுவ பலம் மற்றும் ஆயுதத் திறன்கள் குறித்து எதிரி நாடுகளுக்கு முழுமையான புரிதல் இல்லை என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கியமான ஏவுகணை உற்பத்தி மையங்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும், சமீபத்திய தாக்குதல்கள் தங்களுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை என்றும் ஈரான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களில் எதிரி நாடுகள் மீது மிகவும் கடுமையான மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





