இனவாதிகளுக்கே தேசிய பாதுகாப்பு குறித்து பதற்றம்: பொன்சேகா சாட்டையடி!
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka நிராகரித்துள்ளார்.
“தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க மேற்படி தரப்பு முயற்சிக்கின்றது.
முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய இயலுமை அவர்களுக்கு உள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கமும் கரிசனை செலுத்தியுள்ளது என தெரியவருகின்றது. பாதாள குழு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.





