உலகம் செய்தி

பங்களாதேஷில் புதிய பிரதமரின் பதவியேற்பு – மோடி பங்கேற்க மாட்டார் என தகவல்

பங்களாதேஷில் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024 ஆம் ஆண்டில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு பங்களாதேஷில் முதன்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது.

இதன்போது தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், மலேசியா, புருனே, இலங்கை,
நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக
பங்களாதேஷ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்
ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில், இந்திய மக்களவை சபாநாயகர்
ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் இந்தியா செல்லவுள்ளதாக, பிரதமர் மோடியால் விழாவில்
பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!