டார்லிங் ஆற்றில் செத்து மிதந்த ஒரு மில்லியன் கணக்கான மீன்கள் இறப்பு! வெளியாகியுள்ள வீடியோ

அவுஸ்திரேலியா நாட்டின் மெனிண்டீயிலுள்ள டார்லிங் ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள மெனிண்டீ நகரத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறது. பிரோக்கன் ஹில் என்ற பகுதியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் மெனிண்டீ நகரம் அமைந்துள்ளது.இந்நகரிலுள்ள டார்லிங் ஆற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததற்கு பாசிப்பூக்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய நாட்டில் பாரிய அளவில் மீன்கள் உயிரிழந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தற்போது டார்லிங் ஆற்றில் ஒரு மில்லியன் மீன்கள், முக்கியமாக போனி ஹெர்ரிங் வகை மீன்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, அத்துடன் முர்ரே காட், கோல்டன் பெர்ச், சில்வர் பெர்த் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான பிற பாரிய வகை மீன் வகைகளும் உயிரிழந்துள்ளன.மேற்கு அவுஸ்திரேலியா முழுவதும் நிலவு வரும் கடுமையான வெப்ப அலை உண்டாகியுள்ளது. இதனால் நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால் மீன்களுக்கு தேவையான ஆக்ஸிசன் கிடைக்காததால் நிறைய மீன்கள் உயிரிழந்து உள்ளது என்று DPI செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மீன்களுக்கு பொதுவாக அதிகப்படியான ஆக்ஸிசன்கள் தேவைப்படுகிறது. ஆனால் புவி வெப்பம் அதிகரிக்கும் போது நீர் குளிர்ந்த தன்மையை இழக்கிறது. இதனால் மீன்கள் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் இறந்திருக்கின்றன என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டார்லிங் ஆற்றில் மில்லியன் கணக்கில் மீன்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டார்லிங் ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதப்பதை அப்பகுதியை சேர்ந்த நபர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.