செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள்!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் நள்ளிரவில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மொத்தமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் பிரதான சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் கொல்லப்பட்ட சிறார்கள் அனைவரும் 8ல் இருந்து 17 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.மேலும், விபத்தில் சிக்கிய அந்த வாகனத்தை செலுத்திய சாரதிக்கு 16 வயதிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். பறக்கும் வேகத்தில் சென்ற அந்த வாகனம், சாலையோர மரத்தில் மோதி, நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

நள்ளிரவில்

இதில் 9 வயது சிறுவன், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, காயங்களுடன் தப்பியுள்ளான். முதற்கட்ட விசாரணையில், உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஐவரில் ஒரு சிறுமியும் இருந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பலியான சிறுவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் எனவும் சமீபத்தில் தான் இவர்கள் நியூயார்க் நகரத்தில் இருந்து நியூ ஹேவன் கவுண்டி பகுதியில் குடியேறியுள்ளனர்.ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகத்தில் இந்த குடும்பத்தினர் பதிவு செய்யவில்லை என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!