இறுதி ஓவர்வரை பரபரப்பு: இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!
இலங்கை Sri Lanka அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிம்பாப்வே Zimbabwe அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவர்வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 178 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.





