சிங்கப்பூர் விமான துறையில் கால் பதிக்கும் இளம் பெண்கள்
சிங்கப்பூரின் விமானத்துறைக்கு இளம் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த துறையில் வேலைசெய்வதற்குப் பெண்களை ஊக்குவிக்க, முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துத் துறையின் பெண்கள் அமைப்பும் இணக்கக் குறிப்பொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
விமானப் போக்குவரத்துத் துறையில் அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். புதிய இணக்கக் குறிப்பின்படி, இருதரப்பும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளன.
விமானப் போக்குவரத்துத்துறை பற்றி இளம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அந்தத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை எடுத்துக்கூறத் தளங்களையும் வளங்களையும் உருவாக்குவதே இதன் முதல் கட்ட நடவடிக்கையாகும்.