அமெரிக்க துருப்புகள் உக்ரைனில் களமிறக்கப்படுமா? – புதிய வியூகம் வகுத்த ஜெலென்ஸ்கி! !
ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்று வரும் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க துருப்புக்களை உக்ரைனில் தங்கவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைன் 90 சதவீதம் அண்மையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க துருப்புகளை நிறுத்துவதற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே துவாப்ஸில் (Tuapse) உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் ரஷ்யாவின் தாமன் (Taman) தீபகற்பத்தில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்தையும் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் உடனான போரை வென்று காட்டுவோம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் புத்தாண்டு தினத்தில் சபதம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





