5ஆவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?
IPL 2026 தொடரில் இன்று (13) நடைபெறும் 21 லீக் ஆட்டத்தில் Rajasthan Royals மற்றும் Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன.
Hyderabad ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் Rajiv Gandhi International Stadium இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
Hyderabad அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.
அடுத்த ஆட்டத்தில் 65 ஓட்டங்கள் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியா பஞ்சாப்பிடமும் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
அடுத்த போட்டியில் 6ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும் 3ஆவது போட்டியில் மும்பையையும் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று 5ஆவது வெற்றியை பதிவுசெய்யும் முனைப்புடன் அவ்வணி களமிறங்கவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் ஐதராபாத் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 9 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.





